இந்தோனீசியாவில் வெள்ளம்: 29 பேர் பலி

இந்தோனீசியாவில் வெள்ளம்: 29 பேர் பலி

1 mins read
17b116a2-d8ba-4305-a173-6da883b8d645
பெங்குலு மாநிலத்தில் பல வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஒரு மாது தனது உடைமைகளை ஒரு சிறிய படகில் எடுத்துச் செல்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் நிலச் சரிவிலும் சிக்கி 29 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமத்ரா தீவில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழையும் தொடர்ந்து பெய்ததால் மக்கள் அவதிப்பட நேர்ந்தது என்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும் இன்னும் 13 பேரைக் காணவில்லை என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வெள்ளநீரால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெங்குலு மாநிலத் திலிருந்து 12,000 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

இங்கு நூற்றுக்கணக்கான கட்டடங்களும் பாலங்களும் இடிந்து விழுந்து சேதம் அடைந்த தாகவும் சாலைகள் பழுதடைந் திருப்பதாக வும் கூறப்படுகிறது. வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டவர்கள் தங்குவதற்கு தற்காலிக முகாம்களை அதிகாரிகள் அமைத்துள்ளனர். சுமத்ராவின் லம்புங் மாநிலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஜகார்த்தா வில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

சுமத்ராவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களும் ஒரு கார ணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.