மணிலா குடியிருப்பு கட்டடத்தில் தீ

மணிலா குடியிருப்பு கட்டடத்தில் தீ

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் பல அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளைக் கொண்ட கண்டோமினிய கட்டடத்தில் நேற்று பெருந்தீ மூண்டதாக அதிகாரிகள் கூறினர்.

அக்கட்டடத்தின் 21வது மாடியில் மூண்ட தீ வேகமாகப் பரவியதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு இல்லை என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மணிலாவில் புறநகர் பகுதியில் உள்ள பசிபிக் கோஸ்ட் டவர் கட்டடத்தில் நேற்று மதியம் தீ மூண்ட தாகவும் தீ மூண்டதற்கான காரணம் இன்னும் கண்டறி யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். தீயை அணைக்க அருகில் உள்ள தீயணைப்பு நிலையங் களிலிருந்து வாகனங்கள் விரைந்து சென்றன.