பாட்டாளிகளுக்குப் பக்கபலமாக இருக்க பைடன் உறுதி

பாட்டாளிகளுக்குப் பக்கபலமாக இருக்க பைடன் உறுதி

1 mins read
9d135b4e-289c-4316-9f09-2d30c95af50a
-

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பக்கபலமாக இருக்கப்போவதாக உறுதி தெரிவித்திருக்கிறார். அடுத்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்திருக்கும் திரு பைடன், தாம் தொழிற்சங்கங்களைத் தயங்காமல் ஆதரிப்பவர் என்று பிட்ஸ்பர்க் நகரில் தொழிற்சங்க ஊழியர்களின் முன்னிலையில் தெரிவித்தார்.

அமெரிக்காவை உருவாக்கியவர்கள் வங்கியாளர்கள், தலைமை நிர்வாகிகள், நிதியாளர்கள் ஆகியோர் அல்லர் என்றும் அந்நாடு ஊழியர்களால் உருவாக்கப்பட்டது என்றும் திரு பைடன் தமது உரையில் கூறினார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 76 வயது பைடன் துணை அதிபராகப் பணியாற்றி இருக்கிறார்.