ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மலேசிய மருத்துவர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படவேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை விசாரித்து வருகின்றனர்.
கிறிஸ்தஃபர் லீ குவான் சென், தன்னுடன் உறவு கொண்டிருந்த பெண்களின் ஆபாசக் காணொளிகளையும் நோயாளிகளுக்குச் செய்யும் மருத்துவ சிகிச்சைகளைக் காட்டும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டதாக 'த கார்டியன்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதற்காக அவர் ஆறு மாதங்களுக்குத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

