ஆஸ்திரேலியா: வெடிகுண்டு செயலிழப்பு

ஆஸ்திரேலியா: வெடிகுண்டு செயலிழப்பு

1 mins read

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரின் புறநகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை வெடி குண்டு நிபுணர்கள் நேற்று செயலிழக்கச் செய்தனர். இதன் தொடர்பில் 43 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது நீதிமன்றத்தில் நேற்று வெடி பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப் பட்டது.

இவ்வாண்டு தொடக்கத்தில் முஸ்லிம் களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அந்த ஆடவர் பதிவிட்டதை அடுத்து அவரை அதி காரிகள் கண்காணித்து வந்ததாக 'ஏபிசி' செய்தி கூறியது.