அரியணை துறந்தார் ஜப்பானியப் பேரரசர்

அரியணை துறந்தார் ஜப்பானியப் பேரரசர்

2 mins read

தோக்கியோ: முப்பது ஆண்டு களுக்குப் பிறகு ஜப்பானியப் பேரரசர் அக்கிஹிட்டோ (படம்) நேற்று அரியணை துறந்தார். 85 வயது அக்கிஹிட்டோவுக்குப் பதிலாக அவரது மூத்த மகன் 59 வயது பட்டத்து இளவரசர் நருஹித்தோ அரியணை ஏற இருக்கிறார்.

1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்கிஹிட்டோ மன்ன ராக முடிசூட்டப்பட்டார்.

நேற்று பிற்பகல் நடந்தேறிய அரியணை துறப்பு விழாவில் ஜப்பானியப் பிரதமர் ‌‌ஷின்ஸே„ அபே, அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுக்கியன் சுரப்பி புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அக்கிஹிட்டோ, உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத் தால் பேரரசராகத் தொடர்ந்து பணியாற்ற சிரமப்படுவதாகக் கூறப்பட்டது.

அரசியல் அனுபவம் இல்லா மல் அரியணை ஏறிய முதல் ஜப்பானியப் பேரரசராக அக்கி ஹிட்டோ திகழ்ந்தார். இருநூறு ஆண்டுகளில் ஜப்பானிய பேர ரசர் ஒருவர் அரியணை துறந்து இருப்பது இதுவே முதன்முறை.

அக்கிஹிட்டோவின் தந்தை ஹிரோ‌‌ஷித்தோ தலைமையில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் பல்வேறு நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது.

அப்போதைய ஜப்பா னிய மக்களால் நடமாடும் தெய் வமாகக் கருதப்பட்ட ஹிரோ‌ ‌ஷித்தோ, 1945ஆம் ஆண்டு போரில் தோற்ற பிறகு தமக்குத் தெய்வத்தன்மை இல்லை என அறிவித்தார்.

நவீன உலகிற்குள் அடி எடுத்து வைத்த ஜப்பானில் அமைதி, மன்னிப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை அக்கிஹிட்டோ வளர்க்க முற்பட்டதாக வர லாற்று நிபுணர்கள் கூறுகின் றனர். சாதாரண பெண்ணைத் திருமணம் செய்து அவரை அரசியாக்கிய முதல் ஜப்பானியப் பேரர சராக அக்கிஹிட்டோ திகழ்ந்தார். நாட்டில் இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த சமயங்களில் நொந்து போன மக்களுக்கு அக்கிஹிட்டோ அளித்த ஆறுதல் குரல் அவர் மீதான அபிமானத்தை வானளவு உயர்த்தியது.

இந்நிலையில், பேரரசர் அக்கி ஹிட்டோ நலம் பெற தங்களது உளங்கனிந்த வாழ்த்துகளை வெளிப்படுத்துவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் தெரிவித்து உள்ளனர்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த அரச குடும்பத்தாருக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக திரு லீ எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

1970ல் பேரரசர் அக்கிஹிட்டோ வும் அவரது துணைவியார் மிச்சி கோவும் சிங்கப்பூருக்கு முதன் முறையாக வருகை புரிந்ததைப் பலரும் நினைவுகூர்ந்திருப்பர் என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.