தொழிலாளர் தினத்திலும்  உழைக்கும் மலேசிய அமைச்சர்கள்

கோலாலம்பூர்: மற்றவர்களுக்குத் தொழிலாளர் தினம் ஓய்வு தின மாக இருந்தாலும் தமது அமைச் சர்களுக்கு அது வேலை தினமாக இருக்கும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது முடிவு செய்திருக்கிறார். 

தொழிலாளர் தினத்தன்று அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பிற்பகல் 2 மணி முதல் தத்தம் அமைச்சுகளின் நடப்புகளைப் பற்றி டாக்டர் மகாதீர் முன்னி லையில் விளக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசே கரன், சிங்கப்பூர்வாழ் மலேசியர் களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பெர்னாமா நாளிதழிடம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

கோலாலம்பூருக்குச் சென்று தமது மனைவியுடன் இந்நாளைக் கொண்டாட விரும்பியதாகவும் டாக்டர் மகாதீரின் இந்த முடிவால் அந்தக் கொண்டாட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டியுள்ள தாகவும் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினருமான திரு குலசேகரன் தெரிவித்தார். 

ஆசியான் மனிதவள அமைச்ச ருக்கான சிறப்புக் கூட்டம், வேலையின் எதிர்காலம் குறித்த ஆசியான் மனிதவள அமைச்சரின் கலந்துரையாடல் ஆகியவற்றுக் காக திரு குலசேகரன் சிங்கப் பூருக்கு வந்திருந்தார். திரு குலசேகரன் தமது அமைச்சுக்காக வேலை உருவாக்கம் குறித்த அறிக்கையைத் தயாரிக்கவுள்ளார். 

டாக்டர் மகாதீரின் இந்த முடிவு பற்றிக் கருத்துரைத்த திரு குலசேகரன், “இந்த ஏற்பாட்டிற்கு நாங்கள் உடன்படவில்லை எனச் சொல்ல விரும்பினோம். ஆனால் இந்த வயதிலும் நினைத்ததை நடத்தி முடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருக்கிறார். என்ன நடக்கிறது என அறியாமல் நாங்கள் மலைத்திருந்தோம்,” என்று கூறினார். 

அரசாங்கத்தின் உந்துசக்தி களில் ஒன்றாக டாக்டர் மகாதீர் திகழ்வதாகவும் அவர் ஒருவரின் உழைப்பு, மூன்று அமைச்சர்களுக்கு ஈடானது என்றும் திரு குலசேகரன் மெச்சினார். 

“ஒருவேளை அவர் தமது வயதைப் பற்றி எங்களிடம் பொய் சொல்லியிருப்பாரோ என்று சில சமயங்களில் நாங்கள் நினைத்தது உண்டு. அவருக்கு வெறும் 60 வயதுதான் என நினைக்கிறேன்,” என்று நகைச்சுவையாகக் கூறிய திரு குலசேகரன், 93 வயது டாக்டர் மகாதீரின் கடின உழைப் பைப் பாராட்டினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon