ஜப்பான் அரியணையில் புதிய மன்னராக நருஹிட்டோ

ஜப்பான் அரியணையில் புதிய மன்னராக நருஹிட்டோ

1 mins read
f801fdd0-65bd-4f33-aefd-8ac373093c57
ஜப்பானின் மன்னராகப் பதவியேற்ற நருஹிட்டோவும் அவரின் துணைவி மசகோவும் மக்களைப் பார்த்துக் கையசைத்தவாறு காரில் அரண்மனைக்குச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ், இபிஏ -

டோக்கியோ: தந்தையைப் போலவே நாட்டின் சின்னமாகவும் மக்களின் ஒற்றுமைக்கான பிரதிநிதியாகவும் மன்னர் பொறுப்பை நிறைவேற்று வார் என்று நேற்று ஜப்பானின் புதிய மன்னராகப் பதவியேற்ற நருஹிட்டோ கூறினார். அரியணை ஏறியபின் பொதுமக்களிடம் அவர் பேசிய முதல் உரையில் இவ்வாறு கூறினார்.

தந்தை அகிஹிட்டோ நேற்று முன்தினம் பதவி விலகியதை அடுத்து அவரின் மகன் நருஹிட்டோ, 59, நேற்று புதிய மன்னராகப் பதவி ஏற்றார். இதை ஒரு புதிய சகாப்தமாகக் கருதி மில்லியன் கணக்கான ஜப்பானிய மக்கள் பதவியேற்பு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

தாம் ஏற்றுள்ள முக்கிய பொறுப்பைப் பற்றி எண்ணும்போது தமக்குப் பக்தி உணர்வு ஏற்படு வதாக அவர் கூறினார்.

அதன்படி நேற்று முன்தினம் டோக்கியோ இம்பீரியல் அரண் மனையில் மன்னர் பதவி விலகல் நிகழ்ச்சி துவங்கியது.

"மன்னராக எனது கடமைகளை இன்றுடன் நிறைவு செய்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன் மன் னராக பதவியேற்ற நான் மக் களுடைய நம்பிக்கையைப் பெற்று அதற்குரிய மரியாதையுடன் என் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி உள்ளேன். அனைவருக்கும் மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என பதவி விலகிய அகிஹிட்டோ கூறினார்.

மன்னர் அமர்ந்த 'கிறிசந்தமம்' அரியணை நருஹிட்டோவிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. புதிய மன் னர் பதவியேற்பதை முன்னிட்டு நாட்டில் 10 நாட்கள் பொது விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.