வாஷிங்டன்: அமெரிக்காவின் சார்லட் நகரிலுள்ள நார்த் கேரலினா பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த துப் பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால் வர் காயமடைந்திருப்பதாகவும் அதில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
முதன்முதலில் அவசரப் பிரிவு போலிஸ் அலுவலகத்திற்கு வந்த ஓர் அழைப்பின் வழி துப்பாக்கி வைத்திருக்கும் நபர் ஒருவர் பலரையும் சுட்டிருப்பது தெரிய வந் தததாக பல்கலைக்கழக வளாக போலிஸ் தலைமை அதிகாரி கூறி னார்.
அதைத் தொடர்ந்து வளாகத் தின் போலிஸ் அதிகாரிகள் கட் டடத்திற்குள் சென்று துப்பாக்கிக் காரனைக் கைது செய்ததாக அவர் சொன்னார்.
துப்பாக்கிச் சூட்டை நடத் தியவர் டிரைஸ்டன் ஆன்ட்ரு டெர்ரெல், 22, என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைப்பற்றி வேறு விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
அதிகாரிகளால் கைது செய் யப்பட்ட டெர்ரெல் காவல் நிலையத் திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, டெர்ரெல் பின்னால் திரும் பிப் பார்த்துப் புன்னகைத்தவாறு செய்தியாளர்களிடம் ஏதோ கத் தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே டெர்ரெல் அப்பல்கலைக்கழகத்தில் தற்போது படித்து வரும் ஒரு மாணவர் என் றும் முன்னாள் மாணவர் என்றும் பல ஊடகங்களில் பலவாறு கூறப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிச் சூடு பட்டோர் ஏற்கெனவே டெர்ரெலுக்கு அறி முகமானவர்களா என்ற தெளிவற்ற நிலையில் இச்சம்பவத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் எந்தத் தகவலும் அளிக்கவில்லை.
பல்கலைக் கழகக் கல்வியாண் டின் இறுதி நாளன்று இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே கைது செய்யப் பட்டுள்ள டெர்ரெல் தனியாக இயங்கியதாக நம்பப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சற்று முன்னர் வளாகத்தில் இருப் போரை ஓடி ஒளிந்துகொள்ளும்படி பல்கலைக்கழகம் அதன் அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் எச் சரிக்கை விடுத்திருந்தது.
சம்பவத்திற்குப்பின் கிட்டத் தட்ட மூன்று மணிநேரம் கழித்து அனைத்து பல்கலைக் கட்டடங் களும் சோதனை இடப்பட்டு பாது காப்பு உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
இதன் தொடர்பில் இறுதித் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக பல்கலை அறிவித் திருந்தது.
இச்சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்தான் கலிஃபோர்னியாவிலுள்ள ஒரு யூதர் வழி பாட்டுத் தலத்தில் இதே போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

