சுடச் சுடச் செய்திகள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரச் சிறை 

லண்டன்: விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு நேற்று லண்டன் நீதிமன்றத்தில் 50 வாரத்திற்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது. தன் மீது இருந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன், அசாஞ் பிரிட்டனில் இருக்கும் எக்குவடோர் தூதரகத் தில் தஞ்சம் புகுந்தார். குற்றச் சாட்டுக்குரிய பிணையைத் தவிர்க்க முயற்சித்ததற்காக அசாஞ்சுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் பிரிட்டனின் நீதிமுறையை அலட்சியப்படுத் தியதுடன் அசாஞ் தனக்கு அளிக் கப்பட்ட தனிச்சலுகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நீதிபதி நேற்று சுட்டினார். பாலியல் பலாத்காரக் குற்றத்திற்கு அதிக பட்ச தண்டனையாக ஓராண்டு சிறையை அசாஞ் பெற்றிருக்கக் கூடும். அதிலிருந்து தப்பித்து நீதிமன்றத்தில் சரணடையத் தவ றியதற்காக அசாஞ் நீதிபதியால் வெகுவாகச் சாடப்பட்டார். தூதரகத்தை விட்டு வெளியேறிய அசாஞ் கைது செய்யப்படுவதை உறுதிப்படுத்த கிட்டத்தட்ட 16 மில்லியன் பவுண்ட் ($S28.4 மி) செலவாகியதாக அவர் பகிர்ந்துகொண்டார். நீதிபதி தண்டனை விதித்தபோது அசாஞ்சின் ஆதரவாளர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கூச்சலிட்டனர். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon