சுடச் சுடச் செய்திகள்

விமானத்தைத் தாக்கத் திட்டமிட்டவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது

மெல்பர்ன்: எடிஹாட் ஏர்வேஸ் விமானத்தை வெடி வைத்துத் தாக்கத் திட்டமிட்டவர் மீது இருந்த குற்றச்சாட்டு நேற்று ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

தன் சகோதரனின் பயணப்பெட்டிக்குள் வெடிகுண்டைப் பதுக்கி வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த காலிட் கயட் மற்றும் ஒரு சகோதரனுடன் சேர்ந்து மேலும் இரு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அபுதாபிக்குச் செல்லவிருந்த விமானத்தில் ரசாயன எரிவாயு தாக்குதல் நடத்துவதாக இருந்தது அவ்விரு திட்டங்களில் ஒன்று என்று போலிசார் தெரிவித்தனர்.

பெட்டியில் வெடிகுண்டு இருப்பதை அறியாத சகோதரன், பெட்டியின் எடை அதிகமாக இருந்த காரணத்தால் விமான நிலையத்தில் போலிசாரால் தடுத்து வைக்கப்பட்டார். அப்போது வெடிகுண்டு வெளியில் எடுக்கப்பட்டது. குற்றச்சாட்டு தொடர்பில் காலிட்டுக்கு ஜூலை 26ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon