கொடிய ஜெல்லிஃபிஷ் விஷத்திற்கு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிப்பு

கொடிய ஜெல்லிஃபிஷ் விஷத்திற்கு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிப்பு

1 mins read

சிட்னி: உலகிலேயே மிகக் கொடிய நஞ்சுடைய உயிரினமாகக் கருதப்படும் இழுது மீன் (ஜெல்லிஃபிஷ்) விஷத்திற்கு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரே ஓர் இழுது மீன் கிட்டத்தட்ட 60 பேரின் உயிரை மாய்த்துவிடும் அளவுக்கு எவ்வளவு கொடியதாக உள்ளதென்று ஆய்வு செய்து வந்தனர் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மனிதனின் அணுக்களைக் கொல்ல, நஞ்சுக்குக் கொழுப்பு தேவைப்படுவதாகவும் கொழுப்பைக் குறிவைக்கும் மருந்துகளைக் கொண்டு சோதனையிட்டால் நஞ்சைத் தடுக்க வாய்ப்புள்ளதாகவும் எண்ணி விஞ்ஞானிகள் சோதித்துப் பார்த்தனர். விஷமேறிய 15 நிமிடங்களுக்குள் கொழுப்பை எதிர்கொள்ளும் மருந்துகளை உடலில் ஏற்றியபோது வலியும் திசு பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவரை மிகப் பெரிய, அதிகக் கொடிய வகை இழுது மீன் நஞ்சைக் கொண்டு மருந்துக்கான சோதனை செய்யப்பட்டதில் வெற்றிகரமாக அமைந்துள்ளது.