தாய்லாந்தின் மன்னர் மகா வஜ்ஜிரலொங்கோர்னின் முடிசூட்டு விழா மே மாதம் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாய்லாந்து அரசாங்கம் இதற்காக ஒரு பில்லியன் பாத் (43 மில்லியன் வெள்ளி) ஒதுக்கியுள்ளது.
வரும் சனிக்கிழமை நிகழும் முடிசூட்டு விழாவில் இந்து வைதீகச் சடங்குகளும் பெளத்த சமயச் சடங்குகளும் இடம்பெறும். 'ஐந்தாம் ராமா' என்ற பெயரையும் கொண்டுள்ள 66 வயது வஜ்ஜிரலொங்கோர்ன், தமது நான்காவது மனைவியான சுதிதா வஜ்ஜிரலொங்கோர்னை தாய்லாந்தின் பட்டத்தரசியாக அறிவித்திருக்கிறார். வஜ்ஜிரலொங்கோர்னுக்கு ஐந்து மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக அரியணையில் ஆட்சிபுரிந்த தந்தை பூமிபோன் அடுல்யதேயின் மறைவுக்குப் பிறகு வஜ்ஜிரலொங்கோர்ன் அரசர் ஆகப்போகிறார்.

