இலங்கைத் தாக்குதல்; ஒன்பது பெயர்கள் வெளியீடு

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரின் பெயர்களை அந்நாட்டு போலிசார் வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின்படி அந்த ஒன்பது பேரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று போலிசார் கூறினர். 

இரண்டு சொகுசு ஹோட்டல்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை கொழும்பைச் சேர்ந்த மளிகை பெருவணிகரின் மகன்கள் நடத்தியதாக போலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளான இந்தத் தாக்குதல்காரர்கள், ஞாயிற்றுக்கிழமையன்று ஒவ்வோர் இடத்திலும் ஒரு தற்கொலைத் தாக்குதல்காரரை நிறுத்தியிருந்தனர்.

தேசிய தெளஹீத் ஜமாத்தின் தலைவர் ஸஹாரான் ஹ‌ஷிம் தாக்குதலை வழிநடத்தினார். ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon