இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது 'சந்திராயன்-2' விண்கலத்தை வரும் ஜூலை மாதம் நிலவுக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த விண்கலப் பயணம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வகம் நேற்று தெரிவித்தது. 'சந்திராயன்-2' இந்தியாவின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக இருப்பதால் அது பத்திரமாகப் பாய்ச்சப்படுமென ஆய்வகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஜூலை 9ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே 'சந்திராயன்-2' விண்ணில் பாய்ச்சப்படும். இதற்கு முன்னதாக 'சந்திராயன்-1' விண்கலத்தை இஸ்ரோ 2008ஆம் ஆண்டில் நிலவுக்கு அனுப்பியிருந்தது.

