வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் சிறையிடப்பட்ட வியட்னாமியப் பெண் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
30 வயது டொவான் தி ஹுவோங்கும் மற்றோர் இந்தோனீசியப் பெண்ணும் கிம் ஜோங் நாமின் முகத்தில் 'விஎக்ஸ்' நச்சுத்திரவத்தைப் பூசி அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆபத்தை விளைவித்த குற்றத்தை ஹுவோங் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அரசுதரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டைக் கைவிட்டனர். வியட்னாமுக்கு ஹுவோங் திரும்பிச் செல்வார் என்று அவரது வழக்கறிஞர் ஹிஸ்யாம் டே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

