நஜிப் மீதான 1எம்டிபி விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நஜிப் மீதான 1எம்டிபி விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த வழக்கு கடந்த மே 14ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன வழக்கு விசாரணை நடைபெறுவதால் 1எம்டிபி வழக்கு விசாரணையை வேறு ஒரு நாளில் விசாரிக்கக்கோரி அரசாங்கத் தரப்பு வைத்த விண்ணப்பத்தை ஏற்று விசாரணைத் தேதியை ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் அறிவித்தார். 1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.