கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு கடந்த ஆண்டு மே மாதம் அரசாங்கம் சிறப்பு தொகையாக 1 மில்லியன் ரிங்கிட் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியது என பிரதமர் துறை தலைமை கணக்காளர் ஸரினா யூசோப் கூறினார். சிறப்பு தொகையை அமைச்சரவை முடிவு செய்து வழங்குவது வழக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நஜிப் மீதான ஊழல் வழக்கில் சாட்சியமளித்த ஸரினா யூசோப் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
பிரதமராக திரு நஜிப் பதவி வகித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்துடன் சிறப்பு ஊதியமாக அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும் ஸரினா கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு திரு நஜிப்பிற்கு சிறப்பு நிதியாக அத்தொகை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் வரை மற்ற அலவன்சுடன் சேர்த்து திரு நஜிப்பின் மாதச் சம்பளம் 58,605 ரிங்கிட்டை எட்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.

