வெனிசுவேலாவில் மோதல்: பலர் காயம்

வெனிசுவேலாவில் மோதல்: பலர் காயம்

1 mins read
79e7a002-42bc-4062-95cd-faeee8063af2
அதிபர் மதுரோவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயம் அடைந்த ஊடகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சக ஊழியர்கள் உதவுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கராக்கஸ்: வெனிசுவேலாவில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக் கும் அரசாங்க ஆதரவு படை யினருக்கும் இடையே மோதல்கள் வலுத்து வரும் நிலையில் காரக்கஸ் நகரில் புதன்கிழமை நடந்த மோதலில் ஒரு பெண் சுட்டுக்கொல்லப்பட்டதுன் பலர் காயம் அடைந்ததாகக் கூறப்படு கிறது.

தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதாகவும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதாகவும் எதிர்கட்சித் தொண்டர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 27 வயது இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமான வர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குவைடோ கேட்டுக் கொண்டுள்ளார். அதிபர் மதுரோ பதவி விலகும் வரை ஆர்ப்பாட் டங்கள் தொடரும் என்று திரு குவைடோ கூறியுள்ளார்.

திரு குவைடோ தன்னை வெனிசுவேலாவின் இடைக்காலத் தலைவர் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்துக்கொண்டார். இவருக்கு அமெரிக்கா, பிரிட்டன், லத்தின் அமெரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் திரு மதுரோ பதவி விலக மறுத்து வருகிறார். ரஷ்யா, சீனா மற்றும் வெனிசுவேலா ராணுவத் தலைவர்களின் ஆதரவு இவருக்கு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு குவைடோவின் முயற்சியில் வெனிசுவேலாவில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக மதுரோ கூறியுள்ளார்.