சுடச் சுடச் செய்திகள்

பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சரை  பதவியிலிருந்து நீக்கினார் பிரதமர் 

லண்டன்: பிரிட்டனில் 5 ஜி தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்க சீனாவின் ஹுவாவெய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் திட்டம் குறித்த  தகவலை வெளியிட்டதற்காக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் கெவின் வில்லியம்சனை அந் நாட்டுப் பிரதமர் தெரேசா மே பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

தற்காப்பு அமைச்சராகவும் அமைச்சரவை உறுப்பினரகாவும் பணியாற்றிய திரு கெவின் வில்லியம்சனின்   திறமையில் தான் நம்பிக்கை இழந்துவிட்டதாக திருவாட்டி  மே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவரின் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தின் ரகசியத் தகவலை  கெவின் வில்லியம்சன்வெளியிட்ட தற்கான ஆதாரங்கள் தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ள தாக திருவாட்டி மே குறிப்பிட்டுள் ளார். இந்நிலையில் கெவின் வில்லியம்சன், தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசப்பட்ட தகவல் வெளியானதற்கு தான் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார்.  தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். 

பிரிட்டிஷ் அமைச்சரவை செயலாளரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சர் மார்க் செட்வில்லுடன் தமக்கு சுமூக உறவு இல்லாததை  வில்லியம்சன் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் ஹுவாவெய் நிறுவனத்துடன் பிரிட்டன் உடன்பாடு செய்துகொண்டால் தேசிய பாதுகாப்புக்கு  ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது  என்பது குறித்து அமைச்சரவை உறுப்பினர்கள் விவாதித்தது உட்பட தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்ட அம்சங்களை பிரிட்டிஷ் நாளேடு ஒன்று வெளியிட்டதை அடுத்து ரகசியத் தகவல் வெளியானது குறித்த விசாரணை தொடங்கியது. 

பெண்கள் விவகாரங்களுக் கான அமைச்சர் திருமதி பென்னி மோர்டன்ட் புதிய தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரி வித்தது. தற்போது கவனித்து வரும் பொறுப்புடன் புதிய பணியையும் அவர் கவனிப்பார்.

பிரிட்டனில்  தற்காப்பு அமைச்சராக ஒரு பெண் பொறுப்பேற்பது இதுவே முதல் தடவை.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon