எரிமலைக்குள் விழுந்த சுற்றுப்பயணி உயிர் தப்பினார்

எரிமலைக்குள் விழுந்த சுற்றுப்பயணி உயிர் தப்பினார்

1 mins read
85bedede-d760-4108-9da2-feb93822a20b
-

அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாயி தீவின் 'கிலாவ்வியா' எரிமலைக்குள் 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த ஆடவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புதன்கிழமை (மே 1) மாலை 6.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாக 'நியூ யார்க் டைம்ஸ்' நாளிதழ் குறிப்பிட்டது.

உலகின் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படும் 'கிலாவ்வியா' எரிமலைக்குள் அப்போது தீக்குழம்பு வெளிவரவில்லை என்று அமெரிக்க வானிலை ஆய்வகம் தெரிவித்தது. உயரத்திலிருந்து விழுந்ததால் பலமாகக் காயமடைந்த அந்த ஆடவரை மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டரைப் பயன்படுத்திக் காப்பாற்றினர்.

பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டிச் சென்று அந்தச் சுற்றுப்பயணி எரிமலையின் உச்சியிலுள்ள நடுக்குழியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கால் இடறி கீழே விழுந்ததாக 'நியூ யார்க் டைம்ஸ்' குறிப்பிட்டது.