ஹோட்டல் பணியாளரைப் பலமுறை அடித்த விமானி

ஹோட்டல் பணியாளரைப் பலமுறை அடித்த விமானி

1 mins read
627460bb-8696-4bd5-999c-98201d4bcfed
-

ஹோட்டல் பணியாளரைத் தலையில் பலமுறை அடித்த 'லயன் ஏர்' விமானி மீது விமானம் ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணியாளர்கள் தனது சட்டையை சரியான முறை இஸ்திரி செய்யத் தவறியதாகக் கருதிய விமானி, உடனே அவரைத் தாக்க ஆரம்பித்ததாக லயன் ஏர் விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை (மே 3) தெரிவித்தது.

விமானி தாக்கியதைக் காட்டும் ஃபேஸ்புக் காணொளியை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். பணியாளரைப் பலமுறை குத்திய விமானியை மற்றொருவர் இழுத்துச் செல்வதைக் காணொளி காட்டுகிறது.