கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவும் ஜோகூர் பட்டத்து இள வரசர் இஸ்மாயிலும் அண் மையில் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விட்டனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள் ளது என்று பரவலாக பேசப் பட்டது.
ஆனால் பிரதமருக் கும் சுல்தான் இஸ்மாயிலுக் கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது என்று மலேசிய மூத்த அமைச்சர் ஒருவர் கூறி யுள்ளார்.
"இருவருக்கும் இடை யே உறவு நல்ல நிலையில் உள்ளது.
"எப்போதும் நல்ல நிலையில் இருக்கும். ஒரு சில சம்பவங்களால் உறவு பாதிக்கப்படாது," என்று உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை மேற் கோள்காட்டி மலேசியகினி இணையத்தளம் தெரி வித்தது.

