பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃபுக்கு பிணை நீட்டிப்பு இல்லை; சிறை சென்றார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று முன்னாள் பிர தமர் நவாஸ் ஷரிஃபுக்கு வழங்கப் பட்ட பிணையை நீட்டிக்க மறுத்து விட்டது.

இதனால் அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப நேரிட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை அவர் அனு பவித்து வருகிறார்.

இந்த நிலையில்  செவ்வாய்க் கிழமை வரை வழங்கப்பட்ட பிணையை  நீட்டிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துவிட்டதால் அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள் ளார். கடந்த மார்ச் மாதம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக ஆறு வார காலம் தற்காலிக பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்தப் பிணையை மேலும் எட்டு வார காலத்துக்கு நீட்டித்து தமக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையையும் அகற்ற வேண்டும் என்று திரு நவாஸ் ஷரிஃப் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரிட்டனில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்று மனுவில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப் கூறியிருந்தார்.

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷரிஃபை கடந்த 2017ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பதவியிலிருந்து நீக்கியது.

1990களில் இரண்டு தவணைகளில் ஆட்சியில் இருந்தபோது ஊழல் புரிந்ததாக ஷரிஃப், அவரது இரண்டு மகன்கள், மகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் மூவரும் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப் பட்டது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon