ராணுவத் தளங்களை அமைக்க சீனா திட்டம்: அமெரிக்கா

வா‌ஷிங்டன்: சீனா, அதன் மாபெரும் வர்த்தக இணைப்பு பாதைத் திட்டத்தில் உலக நாடு களை பங்கேற்க அரும்பாடுபட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவது சீனாவின் திட்டமாகும்.

ஆனால் அதே சமயத்தில் இந்த வர்த்தகப் பாதை செல்லும் நாடுகளில் சீனா தனது ராணுவத் தளங்களையும் அமைக்கும் சாத்தியமுள்ளது என்று அமெரிக் காவின் தற்காப்பு அமைச்சு கூறி யுள்ளது.

பெய்ஜிங்கின் ஒரே ஒரு வெளி நாட்டு ராணுவத் தளம் தற்போது ஜிபோட்டியில் செயல்படுகிறது.

இந்நிலையில் மேலும் பல ராணுவத்தளங்களைக் கட்ட சீனா திட்டமிட்டு வருகிறது.

"வர்த்தக இணைப்புப் பாதைத் திட்டத்தைப் பாதுகாக்க சீனாவின் ராணுவத் தளங்கள் வெளிநாட்டில் அமையலாம்," என்று அறிக்கை தெரிவித்தது.

முதற்கட்டமாக நட்பு நாடு களான பாகிஸ்தான் போன்ற நாடு களில் அது ராணுவத் தளங்களை கட்ட முயற்சிகளை எடுக்கலாம்.

இதனால் அந்நாடுகளில் சீனாவின் ராணுவம் முழுநேரமும் விழப்பு நிலையில் இருக்கும்.

மேலும் மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசியா, மேற்கத்திய பசி பிக் ஆகிய வட்டார நாடுகளிலும் ராணுவத் தளங்களை அமைக்க சீனா இலக்கு வைத்துள்ளது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ் தானின் தென்மேற்கில் உள்ள வாக்ஹானில் ராணுவத்தளம் அமைப்பது குறித்து சீனா ஆலோ சனை நடத்தியது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சீனா-பாகிஸ்தான் எல்லையோரமுள்ள வாக்ஹான் அருகே தஜிகிஸ்தானில் பல சீன துருப்புகள் காணப்பட்டதாக வா‌ஷிங்டன் போஸ்ட் அண்மையில் கூறியிருந்தது.

ஏற்கெனவே தென்சீனக் கடலிலும் தீவை உருவாக்கி சீனா ராணுவத்தளத்தை அமைத் துள்ளது. இந்த நிலையில் ராணுத் தளங்களை அதிகரிக்கும் சீனா வின் முயற்சி, வர்த்தக இணைப்புப் பாதைத் திட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!