கிம் ஜோங் நாம்; வியட்னாமிய பெண் விடுவிப்பு

கிம் ஜோங் நாம்; வியட்னாமிய பெண் விடுவிப்பு

1 mins read

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோ தரர் கிம் ஜோங் நாம் கொல்லப் பட்ட வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது பெண் ணும் நேற்று விடுவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் வியட்னாமிய பெண் டோன் தி ஹுவோங் மீதான குற்றச்சாட்டை காயம் விளைவித்ததாக குறைக்க மலேசிய போலிசார் முன் வந்த னர்.

இதையடுத்து நேற்று அவர் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார்.

2017ல் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் நாமை கொலை செய்த வழக்கில் இந் தோனீசியாவைச் சேர்ந்த சிட்டி ஆயிசா, வியட்னாமின் ஹுவோங் ஆகிய இருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

இருவரும் கொலைக்குற்றச் சாட்டை மறுத்தனர். தொலைக் காட்சியின் குறும்பு விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக எண்ணி தாங்கள் அப்படி நடந்து கொண்டதாகவும் அவர்கள் கூறினர். கிம் ஜோங் நாமைக் கொல்ல சதிகாரர்கள் தங்களை தந்திரமாக பயன்படுத்திக் கொண்டதாக அவர்கள் தெரி வித்தனர்.

திரு ஹுவோங் உடனே நாடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

"நான் ஹுவோங்கை நேற்று சிறையில் சந்தித்தேன். அவருக்கு சிறை உடைகளுக்குப் பதிலாக புதிய உடைகள் வழங்கப்பட்டன," என்று அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இவருடன் குற்றம் சாட்டப் பட்ட சிட்டி ஆயிசா கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டு கைவிடப் படுவதாக மலேசிய போலிசார் அறிவித்தனர். இதையடுத்து சிட்டி ஆயிசா உடனே இந் தோனீசியா திரும்பினார்.