தாய்லாந்து மன்னரின் கோலாகல முடிசூட்டு விழா

தாய்லாந்து மன்னரின் கோலாகல முடிசூட்டு விழா

1 mins read
27421c0b-e04c-414d-915f-e2eb9fd0c86b
தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நேற்று பேங்காக் அரண்மனையில் கோலாகலமாக நடந்தது. அவருக்குப் பக்கத்தில் அவரின் மனைவி சுதிடா அமர்ந்திருக்கிறார். இவர்களின் திருமணம் புதன்கிழமை நடந்தது. திருமணம் முடிந்த மறுநாளே நாட்டின் அரசியாராக சுதிடா அறிவிக்கப்பட்டார். மன்னரின் நான்காவது மனைவி சுதிடா ஆவார். படம்: இபிஏ -

பேங்காக்: தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நேற்று பேங்காக்கில் கோலாகல மாக நடந்தது. 69 ஆண்டுகளில் தாய்லாந்தில் நடக்கும் முதல் முடிசூட்டு விழா இது.

இந்த கொண்டாட்டங்கள் தாய்லாந்தில் மூன்று நாட்களுக்கு நீடிக்கவுள்ளது.

2016ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன் மஹா வஜிரலோங்கோர்ன் அந்நாட்டின் மன்னர் ஆனார்.

இருப்பினும் மன்னர் வஜிரலோங்கோர்னின் அதிகார பூர்வ முடிசூட்டு விழா இப்போது தான் நடைபெறுகிறது. பேங்காக் கில் உள்ள மாபெரும் அரண்மணை யில் முடிசூட்டு விழா நடைபெற்றது.

பல்வேறு பாரம்பரிய சடங்குகள் நடந்துமுடிந்த பிறகு மன்னரின் தலையில் 7.3 கிலோ எடை கொண்ட கீரிடம் அணிவிக்கப் பட்டது.

மன்னர் வஜிரலோங்கோர்ன் (வயது 66) தான் விரும்பிய பெண் சுதிடாவை புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.