அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம்

அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம்

1 mins read
e99a7791-70c4-495f-9b31-56022983e757
போயிங் 737ரக விமானம் ஃபுளோரிடாவில் ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் விழுந்ததில் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் 143 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படம்: ராய்ட்டர்ஸ்    -

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் ஒரு விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி அருகில் உள்ள ஆற்றில் விழுந்ததில் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

போயிங் 737ரக விமானத்தில் 143 பேர் இருந்ததாகவும் பயணிகள் யாருக்கும் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

அந்த விமானம் ஃபுளோரிடா விமான நிலையத்தில் வெள்ளிக் கிழமை தரை இறங்கியபோது அப்பகுதியில் இடியும் மின்னலுமாக இருந்ததாக பயணிகளில் சிலர் கூறினர்.

ஓடுபாதையிலிருந்து விலகிய அந்த விமானம் அருகில் உள்ள செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்ததில் குறைந்தது 20 பேருக்கு மட்டும் இலேசான காயங் கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.