பாலியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்து வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள ஒரு பேரங்காடியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாழை இலையில் வைத்து சுற்றப்பட்டு விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பே வாழை இலையை தாங்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக அந்த பேரங்காடி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
வாழை இலையில் வைத்து சுற்றப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

