ஜோகூர்பாரு: ஜோகூர் சுல்தான் இஸ்கந்தார், புக்கிட் சாகாரில் உள்ள அவருக்கு சொந்தமான நிலம் ஆர்டிஎஸ் ரயில் திட்டத்திற்குத் தேவைப்பட்டால் அந்த நிலத்தை இலவசமாக பக்கத்தான் ஹரப்பான் அரசாங் கத்திடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக அவரது அந்தரங்க செயலாளர் ஜாபா முகம்மது நோவா கூறியுள்ளார்.
ஜோகூர் பாருவுக்கும் சிங்கப் பூருக்கும் இடையில் மேற்கொள்ள விருக்கும் ரயில் இணைப்பு திட்டத்திற்கு சுல்தானுக்கு சொந்தமான இடமும் தேவைப் படுவது குறித்து இதுவரை சுல்தான் இஸ்கந்தாருக்குத் தெரியாது என்றும் ஜாபா கூறினார். அன்றாடம் சிங்கப் பூருக்கு செல்லும் மக்கள் சிரமப் படுவதை ஜோகூர் சுல்தான் கவனித்துக் கொண்டிருப்பதாகக் கூறிய ஜாபா, ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுல்தான் எப்போதுமே மக்களின் நலனுக் கும் அரசாங்கத்தின் நலனுக்கும் முன்னுரிமை அளிப்பார் என்பதை யும் அவர் வலியுறுத்தினார்.
ஆர்டிஎஸ் திட்டத்திற்கு புக்கிட் சாகாரில் உள்ள 4.5 ஹெக்டர் நிலம் தேவைப்படுவ தாகவும் அந்த நிலம் ஜோகூர் சுல்தான் பெயருக்கு மாற்றப் பட்டிருந்தால் அந்த நிலத்தை மத்திய அரசாங்கம் மீட்டுக் கொள்ளும் என்றும் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறி யிருந்தார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது வசிக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை 400,000. இவர்களில் பெரும் பாலானோர் ஜோகூரிலிருந்து அன்றாடம் சிங்கப்பூருக்கு செல்கின்றனர்.

