இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 600 பேர் வெளியேற்றம்

3 mins read

கிட்டத்தட்ட 200 இஸ்லாமிய சமய போதகர்கள் உட்பட வெளி நாட்டவர் 600 பேரை இலங்கை, நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த பயங்கர வாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் வஜிர அபெவர்தன கூறினார்.

சமய போதகர்கள் சட்டரீதி யாக நாட்டுக்குள் வந்திருந்தாலும் அவர்கள் தங்கள் விசாவுக்குரிய காலத்தை மீறி நாட்டில் தங்கி இருந்ததாக பயங்கரவாதத் தாக் குதல்கள் தொடர்பில் நடத்தப் பட்ட பாதுகாப்புச் சோதனை களின்போது கண்டுபிடிக்கப்பட் டது. இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டனர்.

தற்போதைய நாட்டு நிலவரத் தைக் கருதி விசா அளிக்கும் முறையை மறுஆய்வு செய்தபின் சமய போதகர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை அதிகரித்து உள்ளதாக அமைச்சர் கூறினார்.

கிட்டத்தட்ட 250க்கும் மேற் பட்ட உயிர்களைப் பலிகொண்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்கு தல்கள் உள்ளூர் சமய போதகர் ஒருவரால் திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் வெளியேற் றப்பட்டவர்கள் பங்ளாதேஷ், இந் தியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர் கள் என்று போலிசார் தெரிவித்து உள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல் களைத் தொடர்ந்து நாடு முழு வதும் அவசரநிலையை இலங்கை அறிவித்துள்ளது. சந்தேக நபர் களைக் கைது செய்து நீடித்த காலத்திற்கு விசாரிக்கப் பாது காப்புப் படைகளுக்கும் போலி சாருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று வெடி குண்டுகள், இஸ்லாமிய பயங்கர வாதிகளின் பிரசார ஆவணங் கள் ஆகியவற்றைத் தீவிரமாகத் தேடும் பணிகளும் நாடு முழு வதும் நடந்து வருகின்றன.

இதன் தொடர்பில் தம் நாட் டின் பாதுகாப்புப் படைகள் பயங் கரவாதத்தை முற்றிலும் ஒழித்து விடும் என்று அதிபர் சிறிசேன உறுதியளித்துள்ளார். அதிபர் தேர்தலுக்கு முன் நாட்டில் அமைதியை மீண்டும் கொண்டு வரப்போவதாகவும் அவர் சூளு ரைத்தார்.

அதிபர் தேர்தல் நவம்பர் 10 முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நடக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதைத் தள்ளி வைக்க முடியாது என்றாலும் தேர்தல் வருவதற்குள் பயங்கர வாதத்தை முற்றிலும் ஒழித்து நாட்டில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவேன் என்று அதிபர் உறுதியுடன் இருக்கிறார்.

சென்ற மாதம் 21ஆம் தேதி யன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் குழு காரணமாக இருக்கலாம் என்று தாம் நம்பு வதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத் திடம் அளித்த பேட்டியில் திரு சிறிசேன தெரிவித்தார்.

தாக்குதல்களுக்குப் பொறுப் பேற்ற ஐஎஸ் குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை இப்போது பிடிப்பது தான் தம் வேலை என்றும் கூறி னார் திரு சிறிசேன. குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் தொடர் பில் மேலும் 25 முதல் 30 உறுப் பினர்கள் கையில் சிக்காமல் உள்ளதையும் அவர் சுட்டினார்.

தமிழ் பேசும் தீவிரவாதி போதகர் ஸஹரான் ஹ‌ஷிம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டவர் என இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் நம்புகின் றனர். தாக்குதல்களை நடத்திய ஒன்பது தற்கொலைத் தாக்குதல் காரர்களில் ஸஹரானும் இருந் திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதன் தொடர்பில் ராணுவமும் போலிசும் மேற் கொண்ட விசாரணைகளில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறிய திரு சிறிசேன, அதற்கு மேலும் கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுவதாக சொன்னார்.