காபூல்: ஆப்கானிஸ்தானில் போலிஸ் தலைமையகத்தைக் குறிவைத்து தலிபான் போராளிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயம் அடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரியை போலிஸ் தலைமையகத்திற்குள் ஓட்டிச் சென்ற ஒருவன் தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போராளிகள் பலர் போலிஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
போலிஸ் தலைமையகம் மீது தலிபான் போராளிகள் தாக்குதல்
1 mins read

