சுடச் சுடச் செய்திகள்

வெனிசுவேலா மக்களுக்கு அமெரிக்கா ஆறுதல்

கராக்கஸ்: வெனிசுவேலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கும் வேளையில் அந்நாட்டில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மைக் போம்பியோ கூறியுள்ளார். வெனிசுவேலாவில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்க்க போராடும் மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று திரு போம்பியோ காணொளி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரோ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ வலியுறுத்தி வருகிறார். அவரது ஆதரவாளர்கள் நாட்டில் அதிபர் மதுரோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திரு குவைடோ அதிபராக வருவதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பதவி விலக மறுத்து வரும் மதுரோவுக்கு ரஷ்யா, கியூபா ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon