ஏவுகணைச் சோதனையை பார்த்து ரசித்த கிம்

ஏவுகணைச் சோதனையை பார்த்து ரசித்த கிம்

1 mins read

சோல்: குறுகிய தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா விண்ணில் செலுத்தி சோதனை செய்ததை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வை யிட்டதை வடகொரிய அதிகாரி கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சனிக்கிழமை வடகொரியா குறுந்தொலைவு ஏவுகணை களை ஜப்பான் கடற்பகுதியை நோக்கி பாய்ச்சி சோதனை செய்தது. வடகொரியாவின் போர்த் திறனை வலுப்படுத்தும் நோக்கத்தில் குறுந்தொலைவு ஏவுகணை சோதனையை மேற் கொள்ளுமாறு திரு கிம் உத்தர விட்டதாகக் கூறப்படுகிறது.

வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப் பதாகக் கூறப்படும் வேளையில் அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக் கும் வடகொரியாவுக்கும் இடை யில் நல்ல உறவு ஏற்படக்கூடிய சூழலை திரு கிம் சீர்குலைக்க மாட்டார் என்று தான் நம்புவ தாகக் கூறியுள்ளார்.

திரு கிம் தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் திரு டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப்பும் திரு கிம்மும் சென்ற ஆண்டு முதன் முறை யாக சிங்கப்பூரில் சந்தித்துப் பேசியபோது அணு வாயுதத் திட்டத்தை கைவிட திரு கிம் உறுதியளித்தார். நெடுந் தொலைவு ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளை வடகொரியா இனி மேற் கொள்ளாது என்றும் திரு கிம் கூறியிருந்தார். வடகொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளியல் தடைகள் தளர்த்தப்படாததால் அந்நாடு தற்போது ஏவு கணைகளை சோதித்திருப் பதாகக் கூறப்படுகிறது.