தாய்லாந்து மன்னரின் ஊர்வலத்தைக் காண வீதிகளில் திரண்ட மக்கள்

தாய்லாந்து மன்னரின் ஊர்வலத்தைக் காண வீதிகளில் திரண்ட மக்கள்

2 mins read

பேங்காக்: தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னின் அதிகார பூர்வ முடிசூட்டு விழாவுக்கு மறுநாள் மன்னரின் ஊர் வலத்தைக் காண ஆயிரக் கணக்கான மக்கள் பேங்காக் வீதிகளில் திரண்டனர்.

நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் அவர் வரவை எதிர்பார்த்து வெகுநேரம் காத்திருந்தனர். பலர் தங்கள் குடும்பத்துடன் காலை 10 மணிக்கே பேங்காக் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மன்னரைக் காண வீதிகளில் திரண்ட மக்களில் பெரும்பா லானோர் மஞ்சள் நிற உடைகளை உடுத்தியிருந்தனர்.

மன்னர் வஜிரலோங்கோர்ன் பேங்காக் அரண்மனையிலிருந்து மூன்று பெளத்த ஆலயங்கள் வரை கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தொலைவுப் பயணமாக ஊர்வலம் சென்றார். நேற்று மதியம் தொடங்கிய மன்னரின் ஊர்வலம் பல மணி நேரம் நீடித்ததாக அரண்மனைத் தகவல் கள் கூறின.

அந்த ஊர்வலத்தில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா உட்பட பல அதிகாரிகளும் நூற்றுக்கணக்கான வீரர்களும் பங்கேற்றனர்.

66 வயதாகும் வஜிரலோங்கோர் னின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா சனிக்கிழமை பேங்காக் அரண்மனையில் வெகு சிறப்பாக நடந்தது. பாரம்பரிய முறைப்படி பல சடங்குகள் நடந்து முடிந்ததும் மன்னரின் முடிசூட்டு விழா நடந்தது. நாட்டின் 10வது மன்னராக முடிசூட்டப்பட்ட பின்னர் அவர் தனது முதல் உரையை ஆற்றினார். மன்னரின் திருமணம் கடந்த புதன்கிழமை நடந்தது. அவரின் மனைவி சுதிடா நாட்டின் அரசியாராக அறிவிக்கப்பட்டார். மன்னரின் முடிசூட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்த பின்னர் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அரச பட்டங்களை வழங்கியதாக தகவல்கள் கூறின.