தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல்-காஸா மோதல்; கூடிவரும் மாண்டோர் எண்ணிக்கை

1 mins read
ae844685-8bae-465b-bead-4483ba4c6730
-

பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காஸா பகுதியிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகளால் இஸ்ரேலில் நான்கு பேர் உயிரிழந்தனர். பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவுக்கு எதிராக மேன்மேலும் தாக்குதல்களை நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு தெரிவித்தார்.

600க்கும் அதிகமான ஏவுகணைகளும் பாய்ந்து செல்லக்கூடிய குண்டுகளும் தனது தென்பகுதி நகரங்களையும் கிராமங்களையும் நோக்கிப் பாய்ச்சப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேனுக்கான ஆதரவுக்குரலை அமெரிக்கா மீண்டும் எழுப்பியுள்ளது. "ஹமாஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முழு அதிகாரம் இஸ்ரேலுக்கு உண்டு. எங்களது சிறந்த நட்பு நாடான இஸ்ரேலுடன் நாங்கள் துணை நிற்கிறோம்," என்று அமெரிக்கத் துணையதிபர் மைக் பென்ஸ் டுவிட்டரில் தெரிவித்தார்.