புருணை சுல்தான்: ஓரினப் பிரியர்களுக்கு எதிரான மரண தண்டனையைச் செயல்படுத்தப்போவதில்லை

புருணை சுல்தான்: ஓரினப் பிரியர்களுக்கு எதிரான மரண தண்டனையைச் செயல்படுத்தப்போவதில்லை

1 mins read
b8d62035-c206-4a04-b780-78db2ef180b9
-

ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு எதிரான மரண தண்டனையைத் தற்காலிகமாக ரத்து செய்ய புருணையின் சுல்தான் ஹசனல் போல்கியா முடிவெடுத்திருக்கிறார். அந்தத் தண்டனைக்கு எதிராக ஜார்ஜ் க்லூனி, எல்டன் ஜான் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் குரல்கொடுத்ததை அடுத்து இந்த முடிவு வெளிவந்தது.

ஏப்ரல் 3ஆம் தேதி ஷாரியா இஸ்லாமியச் சட்டம் குறித்த தனது புரிதலை புருணை வெளியிட்டது. அந்தச் சட்டத்தின்படி கள்ளத் தொடர்பு, பாலியல் பலாத்காரம், ஓரினப் புணர்ச்சி ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

கொலை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு புருணையில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆயினும் 1990கள் முதல் எந்த மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை.

"கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நாங்கள் மரண தண்டனையைத் தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறோம். மன்னிப்புக்கு அதிக இடமளிக்கும் ஷாரியா குற்றவியல் வழக்குகளுக்கு இந்த ரத்து பொருந்தும்," என்றார் சுல்தான் ஹசனல்.

எண்ணெய் வளம் நிறைந்த புருணையின் அரசாங்க அதிகாரம் முழுவதும் அதன் அரசர்களின் கையில் உள்ளது.