மட்டக்களப்பு: அண்மையில் இலங்கையைப் பயங்கரவாதத் தாக்குதல்கள் உலுக்கின. அதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், அரசுப் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அதிகாரி கள் நேற்று முன்தினம் பள்ளி களுக்குச் சென்று தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். அப்பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு வெளியே போலிசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும் மாணவர்கள் பலர் வராத காரணத்தால் வகுப்புகள் காலியாக இருந்தன. இலங்கையில் சீரான, அமைதியான நிலை திரும்பும் வரை தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என்று பெற்றோர் பலர் தெரி வித்துள்ளனர்.
இதற்கிடையே, இலங்கையில் உள்ள கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நீர்கொழும்பில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை நோக்கி கும்பல்கள் கற்களை வீசியதாகவும் முஸ்லிம் களின் வீட்டிற்குள் புகுந்து அவர்களது மரக்கலன்களையும் வாகனங்களையும் சேதப்படுத்திய தாகவும் கூறப்படுகிறது.

