இளவரசரை சிறுவன், மூடன் என்றழைத்த மகாதீர்

இளவரசரை சிறுவன், மூடன் என்றழைத்த மகாதீர்

2 mins read
6f619d8b-6a52-45eb-9e77-477fe8cf7f89
டாக்டர் மகாதீர் முகம்மதுக்கும் (இடது) ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிமுக்கும் இடையே மோசமடையும் கருத்து மோதல். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புத்ராஜெயா: ஜோகூரின் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ரா ஹிமை சிறுவன் என்றும் மூடன் என்றும் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது அழைத்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான உறவில் ஏற்கெனவே விரிசல் ஏற்பட்டிருந்தது.

அண்மையில் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர்.

இந்நிலையில், டாக்டர் மகா தீரின் இந்தக் கடுமையான சொற்கள் 34 வயது இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிமுடனான உறவை மேலும் கசப்படையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

மலேசியாவின் அரசியல் சாசனத்தின்கீழ் ஜோகூர் மாநில அரசையும் அதன் உயர் அதிகாரி களையும் நியமிக்கும் அதிகாரம் கூட்டரசு அரசாங்கத்துக்கு இருக்கிறதா அல்லது மாநிலத்தின் அரசக் குடும்பத்துக்கு இருக்கிறதா என்பது குறித்து டாக்டர் மகாதீருக்கும் ஜோகூர் அரசக் குடும்பத்துக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

புத்ராஜெயாவில் நேற்று செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார் 93 வயது டாக்டர் மகாதீர்.

அப்போது அவர் ஜோகூர் பட்டத்து இளவரசர் தமக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி கருத்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியதாக மலேசியாகினி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

"ஜோகூர் சுல்தானைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அவர் சுல்தானாக இருப்பதால் நான் அவருக்கு எதிராக ஏதாவது கூறினால் அது நன்றாக இருக் காது.

"ஆனால் ஜோகூரின் பட்டத்து இளவரசர் ஒரு சிறுவன். அவருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாததால் அவர் ஒரு மூடன்.

"ஒரு விஷயம் பற்றி தெரியாவிட்டால் அது குறித்து பேசக்கூடாது," என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.