விழுந்து நொறுங்கிய விமானம்; 41 பேர்பலி

விழுந்து நொறுங்கிய விமானம்; 41 பேர்பலி

1 mins read
4de62325-a0d3-48c3-ab48-5b203839471b
தீப்பிடித்து எரிந்த விமானம். படம்: ஏஎஃப்பி -

மாஸ்கோ: மாஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கிய ஏரோஃபிளோட் விமானம் விழுந்து நொறுங் கியதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த 41 பேர் மாண் டனர்.

விழுந்து நொறுங்கிய விமா னம் தீப்பிடித்துக் கொண்டது. அதில் சிக்கி மாண்டவர்களில் இரண்டு பிள்ளைகளும் அடங் குவர் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.

மின்னல் காரணமாக விமா னத்தை அவசரமாக தரையிறக்க நேரிட்டதாக உயிர் தப்பிய விமானி தெரிவித்தார்.

மின்னல் காரணமாக விமானத்தால் கட்டுப்பாடு நிலையத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் போனதாகவும் அதன் விளைவாக உடனடியாக விமான நிலையத்துக்குத் திரும்பி தரை இறங்கும் அவசியம் ஏற்பட்ட தாகவும் அவர் கூறினார்.

விமானம் மீது மின்னல் பட்டதா இல்லையா என்பதை விமானி தெளிவுபடுத்தவில்லை.

இதற்கிடையே, விமானத் துக்கு ஏற்பட்ட நிலைக்கான காரணத்தைக் கண்டறிய ரஷ்ய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரசமாக தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி அதன் பின்பகுதியில் தீ மூண்ட காட்சியை ரஷ்ய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப் பியது. விமானம் ஓடுபாதையில் விழுந்ததும் அதன் அவசரகால சறுக்கு மிதவைகள் மூலம் பயணிகள் பலர் விமானத் திலிருந்து வெளியேறி தப்பினர்.

விமானத்தில் இருந்த 78 பேரில் 37 பேர் உயிர் தப்பியதாக ரஷ்யப் புலனாய்வுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித் தார்.