சுடச் சுடச் செய்திகள்

ஒரே பாலின உறவு: எதிர்ப்பலைக்கு பணிந்த புருணை

பண்டார் ஸ்ரீ பகாவான்: ஒரே பாலின உறவில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று புருணை அறிவித்ததும் உலகெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பின.

ஜார்ஜ் குளூனி, எல்டன் ஜான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் புருணையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

புருணையுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று பலர் போர்க் கொடி ஏந்தி தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

இந்நிலையில், அனைத்துலக  எதிர்ப்பலைக்கு புருணை பணிந்துள்ளது.

புருணையின் ஷரியா சட்ட அணுகுமுறையில் ஒரே பாலின உறவில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிப்பது அதில் சேர்க்கப்படாது என்றார் புருணை சுல்தான் ஹசனல் போல்கியா. புருணை சுல்தானின் இந்த அறிவிப்புக்கு சிலர் வரவேற்பு தெரிவித்தனர். ஆனாலும் இத் தகைய சட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது மட்டும் போதாது என்றும் சிலர் தெரிவித்தனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon