நியாமே: நைஜர் தலைநகர் நியாமேயில் உள்ள அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி வெடித்ததில் 55 பேர் உயிரிழந்தனர். நேற்று நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 36 பேர் காயமுற்றதாக நைஜரின் உள்துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
பெட்ரோல் லாரி வெடித்ததில் அருகில் இருந்தவர்கள் உடல் கருகி மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் தண்டவாளத்தை அந்த லாரி கடந்து செல்ல முயன்றபோது அது கவிழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
கவிழ்ந்த லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை எடுக்க பலர் முற்பட்டபோது லாரி வெடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.