இளவரசர் ஹேரிக்கு ஆண் குழந்தை

இளவரசர் ஹேரிக்கு ஆண் குழந்தை

1 mins read
fb97df69-aa74-4548-9f6b-61474df3ff3e
-
Google News Preferred Icon

பிரிட்டனின் இளவரசர் ஹேரிக்கும் சசெக்ஸ் கோமகள் மெகன் மார்க்கலுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தாமும் தமது மனைவியும் மிகவும் மகிழ்வதாக இளவரசர் ஹேரி தெரிவித்திருக்கிறார். ஆதரவு அளித்த பொதுமக்களுக்கு அவர் நன்றி கூறினார்.

பிரிட்டனின் நேரப்படி அந்தக் குழந்தை காலை 5.26 மணிக்குப் பிறந்தது. புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை, இரண்டாம் எலிசபத் அரசியாரின் எட்டாவது பேரப்பிள்ளை.

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, குழந்தையின் பெற்றோருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.