ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களை விடுவித்த மியன்மார்

ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களை விடுவித்த மியன்மார்

1 mins read
e0a52190-4f91-4758-9aac-b235fcc1f002
-

மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 7ஆம் தேதி) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தை மீறியதன் பேரில் கைது செய்யப்பட்ட அவ்விருவரும் 500 நாட்களுக்கு மேலாகச் சிறையில் இருந்தனர்.

கடந்தாண்டு செப்டம்பரில் 33 வயது வா லோனும் 29 வயது கியாவ் சேவும் குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜனநாயகப் பாதையில் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த மியன்மாருக்கு இந்தத் தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியதாகக் குறைகூறல்கள் எழுந்தன. அந்த ஆடவர்கள் இருவரும் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியிருந்தது. அவர்களின் உடனடி விடுதலைக்காகவும் அந்நிறுவனம் கோரி வந்தது.

மியன்மார் அதிபர் வின் மியின்ட், கடந்த மாதம் ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கினார். மியன்மாரில் புத்தாண்டு காலக்கட்டத்தில் கைதிகள் பலருக்கு மன்னிப்பும் விடுதலையும் கொடுக்கப்படுவது வழக்கம்.