இடைவிடா கனமழை; உச்ச விழிப்புநிலையில் பினாங்கு

இடைவிடா கனமழை; உச்ச விழிப்புநிலையில் பினாங்கு

1 mins read
f84ee894-32c2-4854-aa56-a86456769926
-

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் திங்கட்கிழமை முதல் இடைவிடாமல் மழை பெய்ததை அடுத்து அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக உச்ச அபாய நிலையான சிவப்பு எச்சரிக்கை நிலைக்கு அடுத்து ஆரஞ்சு நிலை இடம்பெறுகிறது.

மழைப்பொழிவு மணிக்கு 30 மிலிமீட்டரைத் தாண்டலாம் எனக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை பெய்த கனமழையால் தீவிலுள்ள பல்வேறு பகுதிகளில் வீட்டுக்கூரைகள் சேதமடைந்தன. அத்துடன் மரங்களும் வேருடன் சாய்க்கப்பட்டன.

இதன் விளைவாக ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள் காயமடைந்தனர்.