சுடச் சுடச் செய்திகள்

பயங்கரவாதிகள் கைது, சுட்டுக்கொலை என இலங்கை அரசு தகவல்

கொழும்பு: கடந்த மாதம் இலங் கையில் நிகழ்ந்த கொடூர குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்பு டைய பயங்கரவாதிகள் அனைவ ரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது கைதாகி உள்ளனர் என்று அந்நாட்டு காவல்துறையின் இடைக்காலத் தலைவர் சந்தன விக்ரமரத்னே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசி யுள்ள ஒலித்தொகுப்பு ஒன்றை இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. 

அதில், எதிர்காலத்தில் தாக்கு தல் நடத்துவதற்காக பயங்கரவாதி கள் பதுக்கி வைத்திருந்த வெடி குண்டுத் தயாரிப்பு மூலப்பொருட் களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பயங்கரவாதிகள் குழுவில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வெடிபொருட்களைக் கைப்பற்றி உள்ளோம். தற்போது ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட் டதை அடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின் றனர்,” என்று சந்தன விக்ரமரத்னே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இலங்கையில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத் தும் திங்கட்கிழமை திறக்கப்பட் டன. எனினும் பெரும்பாலான பள்ளிகளில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களே வந்தி ருந்தனர். இந்நிலையில் பள்ளிக ளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் 9 பெண்கள் உள்ளிட்ட 73 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon