பேங்காக்: ரோஹிங்யா நெருக்கடி குறித்து செய்தி சேகரித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட ராய்ட் டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
சுமார் 500 நாட்கள் சிறைவாசத் திற்குப் பிறகு 33 வயது வா லோன், 29 வயது கியாவ் சோ ஊ ஆகிய இருவரும் அதிபர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் ரகசிய சட்டத்தை மீறியதற்காக அவர்கள் இருவரும் 2017 டிசம்பர் மாதம் கைது செய்யப் பட்டனர். வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு ஏழு ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. இந்த நிலையில் நேற்று 6,000 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இவர்களில் செய்தியாளர்களும் அடங்குவர்.
கடந்த மாதம் தொடங்கிய மியன்மார் புத்தாண்டையொட்டி பெருமளவில் கைதிகளை விடு விப்பது வழக்கம். அந்த வகையில் செய்தியாளர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
யங்கூன் நகர சிறையிலிருந்து இரு செய்தியாளர்கள் வெளியே வந்ததும் ராய்ட்டர்ஸ் ஒரு காணொளியை வெளியிட்டது.
அதில் தம்முடைய ஆதரவாளர் களுக்கு வா லோன் நன்றி தெரி வித்துக்கொண்டார். என்னுடைய மனைவியையும் குழந்தையையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்று அவர் கூறினார். ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யா மக்கள் பத்து பேர் கொல்லப்பட்டதை விசாரித்துக்கொண்டிருந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர்.

