பெட்டாலிங் ஜெயா: பிரதமர் மகா தீருக்கும் ஜோகூர் சுல்தானுக்கும் இடையே உரசல் அதிகரித்துள்ள வேளையில் மகாதீரின் சிறப்பு ஆலோசகர் ஏ. கதிர் ஜாசின், மடோஸ் என்ற நிறுவனம் செலுத் திய வரி குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார். இந்நிறுவனம், ஜோகூர் அரச குடும்பத்துடன் தொடர்புடையது என்று நம்பப்படு கிறது. மடோஸ் நிறுவனம் தொடர்பான மூடப்பட்ட விசார ணைகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை யையும் வருமான வரி துறையையும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் மற்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. நேற்று முன்தினம் ஜோகூர் பட்டத்து இளவரசரை ஒன்றும் தெரியாத சிறுவன் என்று பிரதமர் மகாதீர் சாடியிருந்தார்.
ஜோகூர் அரச குடும்பத்துக்குத் தொடர்புடைய நிறுவனத்தை விசாரிக்க வேண்டும்: மகாதீர் ஆலோசகர் வலியுறுத்து
1 mins read

