சீனாவின் போக்கில் மாற்றம்; வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

சீனாவின் போக்கில் மாற்றம்; வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுடன் கடந்த சில வாரங்களாக வர்த்தக பேச்சு நடத்தி வரும் சீனாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உறுதியளித்த விவகாரங்களி லிருந்து சீனா பின்வாங்குவதால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்கா திட்ட மிட்டு வருகிறது.

"சீனா தனது கடப்பாட்டிலிருந்து பின்வாங்குவது கடந்த சில வாரங் களாக நடைபெற்ற பேச்சு வார்த்தை யிலிருந்து தெரிய வருகிறது," என்று அமெரிக்க வர்த்தகப் பிரதி நிதி ராபர்ட் லைட்டிசர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

இருந்தாலும் இவ்வார இறுதியில் தொடங்கும் பேச்சுவார்த் தையில் பங்கேற்க சீனாவின் பேராளர் குழு வா‌ஷிங்டன் வரு வதாகவும் அவர் சொன்னார்.

புதன்கிழமை அன்று அமெரிக்க, சீன வர்த்தகப் பேச்சு தொடங்கும் என்று அறிவிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தற்போது ஒரு நாள் கழித்து வியாழக்கிழமை பேச்சு தொடங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதில் வெள்ளிக்கிழமைக்குள் ஒரு முடிவும் ஏற்படாவிட்டால் அமெரிக்க பேராளர் குழுவினர் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்து வரி விதிக்க வலியுறுத்துவார்கள் என்று அமெரிக்க நிதியமைச்சர் மினுச்சின் சொன்னார்.

வரி விதிப்பது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகும்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வரி விதிப்பு அமலுக்கு வரும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி 10 விழுக் காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்படும் என்று டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

கடந்த மார்ச் மாதமே இந்த வரி விதிப்பு அமலுக்கு வரவிருந் தது.

ஆனால் அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக பேச்சு வார்த் தையைத் தொடங்கியதால் வரி விதிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பேச்சு வார்த் தையில் தற்போது சீனா தனது முன்னைய நிலையிலிருந்து பின் வாங்குவதாக அமெரிக்கா கூறுகிறது. இதற்கிடையே சீனா வின் வர்த்தகப் பிரதிநிதிகள் வா‌ஷிங்டன் வந்து சேர்ந்துள்ளனர்.