மெக்சிகோவில் விழுந்து நொறுங்கிய விமானம்; 13 பேர் பலி

மெக்சிகோவில் விழுந்து நொறுங்கிய விமானம்; 13 பேர் பலி

1 mins read
03589ee7-27e1-4f31-8822-decb319e34c5
-

மெக்சிகோவின் வடக்கிலுள்ள மலைப்பகுதியில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 13 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானத்தின் சிதைவுகளை வானூர்திகள் ஒகாம்போ நகரில் கண்டுபிடித்ததாக கொவாஹுவிலா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுக்குநூறாக உடைந்த விமானச் சிதைவுகள் கருகிய மண் மீது படர்ந்திருப்பதைக் காட்டும் படங்களை அந்நாட்டின் ஊடகங்கள் வெளியிட்டன.

உயிரிழந்தோர் 19 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன.